உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் நீடித்து போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி சண்டை நடைபெறும் போர் முனைக்கு நேரில் சென்று வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
ரஷ்ய படைகள் ஆக்ரோஷமுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் கிழக்கு பகுதியில் அமைந்த தொன்பாஸ் தொழிற்சாலை மண்டலத்தில் ராணுவ முகாம்களுக்கு சென்றார்.
இதேபோல், சிவர்ஸ்கை டோனெட்ஸ் ஆற்றின் குறுக்கே அமைந்த லிசிசன்ஸ்க் பகுதிக்கும் சென்று வீரர்களுடன் உரையாடினார்.
அப்போது, உங்களுடைய சிறந்த பணி, சேவை, நமது நாட்டை பாதுகாப்பதற்காக நன்றி தெரிவித்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
ஒவ்வொருவருக்கும் தான் நன்றி கடன்பட்டுள்ளேன் என்றும் உங்களையும் கவனித்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.