ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
ஈரான், பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களை மத்திய ஆசிய நாடுகளில் குடியமர்த்த வேண்டும் என மேற்கத்திய நாடுகள் யோசனை தெரிவித்துள்ளன.
இதனை கடுமையாக எதிர்த்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வருபவர்களை, விசா இல்லாமல் ஏற்க மேற்கத்திய நாடுகள் மறுக்கும் நிலையில், தாங்களும் தங்கள் அண்டை நாடுகளும் விசா இல்லாமல் ஏற்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அகதிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை ஏற்க தயாராக இல்லை என்றும் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.