அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உணவகத்தில் ‘தடுப்பூசி போடாத’ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் தடுப்பூசியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸின் உருமாற்றம் பல நாடுகளில் ஆரம்பிக்க தொடங்கியுள்ளன.
இதனை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழியாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிரான குரலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.
ஏனெனில் இந்த தடுப்பூசிகள் மேற்கொண்டுவரும் உருமாறும் கொரோனா வைரசுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹண்டிங்டன் பீச்சில் அமைந்திருக்கும் பசிலிகோஸ் பாஸ்தா இ வினோ என்ற இத்தாலிய உணவகம், தனது ரெஸ்டாரன்டின் ஜன்னல்களில் ஒரு வினோத அறிவிப்பு போஸ்டரை ஒட்டியுள்ளது.
அது என்னவென்றால், ‘தடுப்பூசி போடாத’ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எங்கள் உணவகத்தில் உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த நோய் தொற்று காலத்தின் தங்கள் உணவகம் “மாஸ்க் ப்ரீ மண்டலம்” என்று அறிவிப்பை வெளியிட்ததால் பல புகார்கள் இந்த உணவகம் மீது கூறப்பட்டது.
இதனிடையே, இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்ற ஆதாரத்தை காட்டினால் போதும் என்பதும் இதன் அறிவிப்பாக உள்ளது.
எனவே இந்த அறிவிப்பும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பசிலிகோஸ் பாஸ்தா இ வினோ வின் உரிமையாளர் டோனி ரோமன் கூறுகையில் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒரு தீர்வுவாகாது எங்கள் நிலைப்பாடு தொடரும், லாக்டவுன் போடப்பட்டாலும் எங்கள் உணவகம் திறந்தே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த உணவகத்தின் அறிவிப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.