மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம்

39

விருதுநகர் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மத்திய அரசு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க துணை பொதுச் செயலாளர் ஜெயராம் தலைமையில் மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுற்றுலா என்ற பெயரில் கோவை – சீரடி விரைவு ரயில், ராமாயண யாத்ரா என்ற பெயரில் டெல்லி – நேபால் ரயில், பாரத் கௌரவ் ரயில் என விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டியும், ரயில்வே நிர்வாகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.