நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

306

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

இங்கு நாள் ஒன்றுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரம் நூல் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நூல் விலை உயர்வை கண்டித்து, ராஜபாளையம் மற்றும் ஆவரம்பட்டி விசைத்தறி உரிமையாளர்கள் இன்று இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நூல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பருத்தி சேலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.