சுனாமியைப் போல் திரண்ட மேகக்கூட்டம்

412
clouds
Advertisement

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் மனித இனத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை சிதைப்பதாகவே உள்ளது.

இயற்கை மீதான மனித தாக்குதல்கள் அதிகரிக்கும் போது தான் நிலச்சரிவு, பூகம்பம், நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம், சுனாமி போன்றவை ஏற்படுகின்றன.

100 ஆண்டுகளுக்கு முறை ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு இயற்கைப் பேரிடரை சந்திக்கிறது.

Advertisement

அதனால் இயற்கை பேரிடர் நிகழப்போவதை அறிவிக்கும் வகையிலான அறிகுறிகள் தென்பட்டால் ஒட்டுமொத்த மனித இனமும் அச்சத்தில் உறைந்து விடுகிறது.

தற்போது சுனாமியைப் போல  திரண்டிருக்கும் மேகக்கூட்டங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் குடியிருப்புகளின் பின்னால் சுனாமி பேரலைகள் போல மேகக்கூட்டங்கள் திரண்டுள்ளன.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது மிகவும் பழைய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் உள்ள ஹைன்ஸ் வில்லேவில் மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் சுனாமியைப் போன்ற தோற்றத்தில் மேகக்கூட்டங்கள் திரண்டன.

சமீபத்தில் சீனாவில் பெய்த பெருமழை அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளை உருக்குலைத்தது.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.