வானில் தோன்றிய “சுனாமி அலை”

30
Advertisement

“சுனாமி” உலகையே புரட்டிப் போட்ட பேரழிவு.இன்றும் அதன் சுவடுகள்  மறையாது உள்ளன.இதற்கிடையில், அமெரிக்கா ஒகையோ நகரத்தில் வானில் “சுனாமி அலை” தோன்றி மக்களிடையில் பீதியை கிளப்பியது.

வானில் மேகம் தோன்றுவது இயல்பு என்றாலும் இந்த மேகம் கடலில் தோன்றும் சுனாமி அலையை போலவே உள்ளது.இதனை படம்பிடித்த நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அசாதாரண வானிலை நிகழ்வை  உருளும் மேகங்கள் அல்லது ஆர்கஸ் மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது. வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உருளும் மேகங்கள் பொதுவாக சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Advertisement