புதுச்சேரியில், நள்ளிரவில் செல்போன் கடையில் செல்போனை திருடி விட்டு வெளியே வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுபாளையத்தில் உள்ள செல்போன் விற்பனை கடையில், நள்ளிரவில் சந்தேகத்திற்குரிய வகையில் விளக்கு எரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், போலீசார் அங்கு சென்ற போது கடையின் உள்ளே இருந்து வெளியே வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னையை சேர்ந்த முருகன் என்பதும், அந்த செல்போன் கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த 15 செல்போன்கள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, கடையின் உரிமையாளர் இளம் பருதிக்கு தகவல் கொடுத்த போலீசார், முருகனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தியதில் சென்னையில் அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.