திடீர் விபத்தில் விலா எலும்பு முறிந்து காயங்களுடன் விக்ரம்..மருத்துவர்கள் சொன்ன செய்தி..சோகத்தில் ரசிகர்கள்…

27
Advertisement

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஆதித்த கரிகாலனாக அனல் பறக்க வைத்துள்ள சியான் விக்ரம், பட ரிலீசுக்கு முன்னதாக 20 நாட்கள் வரை ப்ரோமோஷன் பணிகளுக்காக நாடு முழுவதும் டூர் அடித்து வந்தார்.

படம் ஒருவழியாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விக்ரமின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தின் ஷூட்டிங்கை resume செய்துள்ளனர். Action காட்சிகளில் தொடங்கிய படப்பிடிப்பு விபத்தில் முடிந்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்த விக்ரமின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லேசான காயமாக இருக்கும் என கூறப்பட்டாலும் குறைந்தபட்சம் ஓரு மாத காலத்திற்காவது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. KGF படம் இந்தியா முழுவதும் சிறப்பான வரவேற்பு பெற்ற நிலையில், கோலார் தங்க வயலை பற்றிய தமிழர்கள் சார்ந்த கதையாக ‘தங்கலான்’ உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.