OTTயில் ஆரமிக்கலாமா விக்ரம்?

2094
Advertisement

ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் 18 நாட்களை கடந்தும், சற்றும் விறுவிறுப்பு குறையாமல் ஓடி வசூலை அள்ளி குவித்து வருகிறது.

உலக முழுவதும் 370 கோடி வசூலை ஈட்டியுள்ள விக்ரம், ரசிகர்களின் வரவேற்பையும், சினிமா விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், ஜூலை 8ஆம் தேதி, விக்ரம் திரைப்படம் Disney +Hotstar இல் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமை 98 கோடிக்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.