விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி

707
vijay mallya
Advertisement

விஜய் மல்லையாவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் திவால் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வங்களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இங்கிலாந்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் திவால் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.