‘முகத்துல 8,9 பிளேட்..பேசக்கூட கஷ்டமா இருக்கு’ கடலில் நடந்த கோர விபத்து குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

28
Advertisement

ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளராக கோலிவுட்டில் கவனம் ஈர்த்த விஜய் ஆண்டனி பிறகு இயக்கம், நடிப்பு என சினிமாவின் பிற பரிமாணங்களிலும் தடம் பதித்துள்ளார்.

மே மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ளார். ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், அண்மையில் மலேசியாவில் படப்பிடிப்பின் போது தான் சந்தித்த விபத்தை பற்றி பேசியுள்ளார்.

ஒரு படகில் அவரும் ஹீரோயினும் இருக்க, இன்னொரு படகில் இருந்து ஷூட் செய்து வந்ததாகவும், திடீரென அலை தாக்கவே அருகில் இருந்த படகை பிடித்து தூக்கிய போது அது முகத்தில் அடித்து, முகத் தாடை இறங்கி விட்டதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

சுயநினைவை இழந்து போய் இருந்ததாகவும் பிறகு கண்ணாடியில் பார்த்து தான் தனக்கு நேர்ந்த விபத்தின் ஆழத்தை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். முகத்தில் 8, 9 பிளேட்கள் வைத்திருப்பதாகவும் பேசுவதற்கு கூட அசௌகர்யமாக இருப்பதாகவும் ஆனால் மனது மிகவும் நன்றாக இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.