சிகரின் உச்சியில் நிகழ்ந்த இயற்கை அதிசயம் !

250
Advertisement

இயற்க்கை எப்பவும் பல அதிசயங்களையும் ஸ்வாரஸ்யங்களை அளிப்பது மறுக்கமுடியாத உண்மை.இந்நிலையில் , மேற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டிர்லிங் ரேஞ்சில் உள்ள ஓர்  சிகரத்தின் மீது மேகங்கள் வசீகரிக்கும்  விதம் உருண்டுசெல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு சூரிய உதயத்திற்குப் பிறகு ஜிகர் கோஸ்ராணி என்பவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. அதில்  , அந்த சிகரத்தின் மீது மேகங்கள் நீர் ஊற்றுபோல  வட்டமான விளிம்பிலிருந்து மலையின் மறுபக்கத்தை நோக்கிச் செல்கிறது.

அதாவது, நீர் ஊற்றில் நீர் மேல்நோக்கி சென்றால் எப்படி இருக்குமோ அதுபோன்று இந்த மேகங்கள் செல்கிறது.பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் இந்த காட்சி லட்சக்கணக்கான  இதயங்களை கொள்ளையடித்துள்ளது.