வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறைக்கு உள்ளது என தெரிவித்தார்.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, நெல்லை மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய நெல்விதைகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய நெல் ரங்களை மீட்டெடுத்த நெல்ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, அத்திட்டத்திற்காக 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.