ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

233

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் களபம் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து படுகாயமடைந்த மாணவரை, மருத்துவமனையில் சந்தித்து, அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் வரும் காலங்களில் ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும், அந்த ஆலை இயங்காது என்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிக்காதவாறு வேறு ஏதாவது நிறுவனங்கள் தொடங்கப்பட்டால் தமிழக அரசு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த தொழிற்சாலைக்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.