இந்திய வீரர்கள் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!

350
Advertisement

இந்திய வீரர்கள், வன்ஷாஜ், அமன் சிங் ஆகியோர் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவா் 63.5 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில், இந்திய வீரா் வன்ஷாஜ் நாக் அவுட் முறையில், சிரியாவின் அகமது நபாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோன்று, 92 கிலோ பிளஸ் பிரிவில் இந்தியாவன் அமன் சிங் பிஷ்ட் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் டிம் போடஷோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.