“அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை”

86

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது.

எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது; அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. பதவிக்காக அதிமுகவில் ஒருசிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர்.

Advertisement

அதிமுகவுக்கான தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படும். அந்த நிலைமை தற்போது இல்லை. என்னை கட்சியில் இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும் என்றார்.