உ.பி-யில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

303
up
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்து உள்ளது.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மாவும், நவீன் குமார் ஜிண்டாலும் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் சஹாரன்பூரில் போராட்டத்தில் இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.

அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப்பிரதேச அரசு இடித்து தள்ளியது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் ஜம்மியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.