ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய உத்தம் ஆனந்த் கடந்த மாதம் 28ம் தேதி ஆட்டோ ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட சிலரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் நீதிபதி கொலை தொடர்பாக யாரிடம் முக்கிய தகவல் கிடைத்தாலும் சிபிஐயிடம் தெரிவிக்கலாம் எனவும், துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.