தகவல் தொழில்நுட்ப உலகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளங்கள் புதிய புரட்சியாக மாறியுள்ளன. உதாரணமாக, சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. அதிலிருந்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தற்போது பயனர்களிடையே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி மூலம் பயனர்கள் தங்கள் ஏதேனும் சந்தேகங்களை உடனடியாக தீர்க்க முடியும் என்பதால் தற்போது அது பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகர முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாட்ஜிபிடி பயன்படுத்துவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறியுள்ளது.
அதாவது, ஏஐ பயன்படுத்தும் மாணவர்களுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை பலருக்கும் நினைவில் வைக்க முடியவில்லையாம். அதேவேளையில், ஏஐ பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை எற்படவில்லை.