முகூர்த்த நாளையொட்டி கல்யாண மாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

23

உசிலம்பட்டியில் முகூர்த்த நாளையொட்டி கல்யாணமாலை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

பூக்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கல்யாணமாலையின் விலை கிடுகிடுவென உயர்ந்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

காதணி விழாவிற்கு அணிவிக்கப்படும் தாய்மாமன் மாலை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வழக்கமான ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான மாலைகளின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தாலும், மக்கள் போட்டி போட்டு மாலைகளை வாங்கினர்.

மாலைகளின் விலை உயர்ந்துள்ள நிலையில், பூக்களின் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.