எச்சரித்த அமெரிக்கா..

292

இந்தியா வந்த அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், சீர்குலைவை ஏற்படுத்தும் நோக்கிலும், பிற நாடுகளின் எல்லைகளை அபகரிக்கும் நோக்கிலும் சீனா செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்திய எல்லையில் சீனா புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், இது இந்தியா எச்சரிக்கையாக இருக்க  வேண்டிய தருணம் என்று தெரிவித்தார்.

லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டிய சீனாவின் படைக்குவிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளதாக சார்ல்ஸ் பிளின் தெரிவித்தார்.