ரஷ்யாவில் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தடை விதிப்பு

239
Advertisement

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. அதில் 11 ரஷ்யா ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடங்கும்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே, பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும்,தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு எப்போதும் போல நீடிக்கும் என்று ரஷ்யா வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.