இனவெறிக் கருத்து -தம்பதியரை காரில் இருந்து வெளியேற்றிய கார் ஓட்டுநர்.

374
Advertisement

பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை.நாள்தோறும் இனவெறி கருத்துக்களை பகிர்வது,இனவெறி தாக்குதல் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் குறிப்பிட்ட சில மக்கள்.

பொது இடத்தில் இனவெறி தாக்குதல் தொடர்கதை ஆகிவிட்டது.இந்நிலையில் இணையத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்று  வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த வாடகை கார் ஓட்டும் நபர் ஒருவர் சாலையில் ஒரு தம்பதியை ஏற்றுவதர்காக நிறுத்துகிறார்.முதலில் அந்த பெண் உள்ளே ஏறுகிறார்,பின் இருக்கையில் உட்காரும் அந்த பெண் ஓட்டுனரை பார்க்கிறார் ,தொடர்ந்து  ஓட்டுனரின் நிறத்தை குறித்து கருத்து ஒன்றை கூறுகிறார்.

இதை எதிர்பார்க்காத அந்த ஓட்டுனரின் முகம் மாறிவிடுகிறது.இதனை கவனித்த அந்த பெண் உடனே ஓட்டுனரின் தோளில் சிரித்தபடி தட்டிக் கொடுக்கிறார்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத ஓட்டுநர் உள்ள உட்கார்ந்துள்ள பெண் மற்றும் உள்ள வர நுழைந்த அவரின் கணவரையும் வெளியே இறங்க சொல்கிறார்.இதனால் சில வினாடிகள் ஓட்டுனருக்கு தம்பதிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது

இவை அனைத்தும் காரில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.இதனை தன் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த ஓட்டுநர்.இனவெறி தொடர்பான கருத்துக்கு எதிராக ஓட்டுனரின் இந்த செயலுக்கு இணையத்தில் தங்கள் ஆதரவை  தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.