“ஒசாமா பின்லேடன்  தான் ,என் வழிகாட்டி”  சர்ச்சையாகும் புகைப்படம்

247
Advertisement

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு  அதிகாரி ஒருவர்,  அலுவலகத்தில் உலகின் மிக பயங்கரமான தீவிரவாதி ஒசாமா பின்லேடன் புகைப்படத்தை வைத்து அதில் ,தன் வழிகாட்டி என குறிப்பிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரூக்காபாத் நகரில் உள்ள நவாப்கஞ்ச் கிராம  அலுவலக வளாகத்தில் ஒசாமா இருக்கும் படம் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைப்படத்தின் கீழே மதிப்பிற்குரிய ஒசாமா பின்லேடன் உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர் என்றும் எழுதப்பட்டுள்ளது.அதன் கீழே SDO ரவீந்திர பிரகாஷ் கௌதம் என்று அதிகாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் வைரலாகி சர்ச்சையானதை அடுத்தே  இது குறித்து தனக்கும் தெரிய வந்துள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

நவாப்கஞ்ச் மின்சாரக் கழக அலுவலக வளாகத்தின் காத்திருப்பு அறையின் சுவரில் ஒசாமா பின்லேடனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.ஆனால் இந்த புகைப்படம் சுவரில் இருந்த அகற்றப்பட்ட பின்பு தான் இது குறித்து  உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளித்துள்ளது.

சப்-டிவிசனல் அதிகாரி ரவீந்திர பிரகாஷ் கெளதமை இது குறித்து அழைத்தபோது, ​​பின்லேடன் எங்கள் குரு என்று தெரிவித்தவுள்ளார்.இணையத்தில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.