முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

248
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை செய்துவிட்டு  வீட்டிற்குள் சென்றுள்ளார். சந்தேகிக்கப்படும் அனீஷ் என்ற அவரின் முன்னாள் காதலன்  நாட்டுத் துப்பாக்கியால் காஜலை சுட்டுள்ளார்.தோட்டா  காஜலின் இடது கண்ணின் அருகே பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை குபி ராம் பிரஜாபதி கூறுகையில், “ஜெய் மாலா என்கிற சடங்கு முடிந்து உடை மாற்றுவதற்காக எனது மகள் அறைக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் வந்து சுட்டுக் கொன்றார். இது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

காவல்துறை தரப்பில் ,  குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணுடன் உறவு வைத்திருந்தார், ஆனால் அவர் வேறொரு ஆணுடன் திருமணம் செய்த கொள்வதால்   விரக்தி அடைந்த முன்னாள் காதலன் இதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.தப்பியோடிய குற்றவாளியை காவல்துறை தேடிவருகிறது.