வீட்டில் ஊடுருவிய  ரஷ்ய ஏவுகணைக்கு அருகில் நின்று “ஷேவ்” செய்த உக்ரைன் நபர்

306
Advertisement

உக்ரைன் ரஷ்யா மோதல் தொடரும்  நிலையில், வீடடுகள் மேல்  ஏவுகணை தாக்குதலும் நடத்திவருகிறது  ரஷ்யா.ஏற்கனவே உக்ரைனின் பல பகுதிகள் தாக்குதலில் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தன் வீட்டிற்குள் ஊடுருவிய ரிஷ்ய ஏவுகணைக்கு அருகில் நின்று உக்ரைன் நபர் ஒருவர்  ஷேவ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சேதமடையாத ராக்கெட் அந்த நபரின் வீட்டிற்குள்  கூரை வழியாக ஊடுருவியது.

அந்த நபர் தன் வழக்கமாக செய்யும் வேலைகளை  நிதானமாக செய்கிறார்.அதில்  ஏவுகணையின் அருகே நின்ற படி இவர்  ஷேவ் செய்தது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.அதில் சிலர் வேடிக்கையான கருத்துக்களையும் மற்றசிலர் இது ஏவுகணை இல்லையென்றும் கூறிவருகின்றனர்.