ஓயாத போரால் பலியான உக்ரைன் குழந்தைகள்

334
Advertisement

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனில் நடந்து வரும் போர் தொடர்பாக ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ரோஸ்மேரி டிகார்லோ பேசினார். அப்போது உக்ரைனில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் தான் பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக குடியிருப்பு கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானங்கள் சேதமடைந்தும், அழிக்கப்பட்டும் காணப்படுகிறது என கூறியுள்ளார். தற்போது வரை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உக்ரைனில் 52 குழந்தைகள் உள்பட 726 பேர் உயிரிழந்திருப்பதை பதிவு செய்திருப்பதாகவும், 1174 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழப்புகளுக்கு யார் காரணம் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.