நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை!

284
Advertisement

நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் அதிபர் முயற்சி மேற்கொண்டதால், அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

தொடர்ந்து 21வது நாளாகா இருநாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் உக்ரைன் இணைய வலியுறுத்தப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இதைதொடர்ந்து நேற்று பேசிய ஜெலன்ஸ்கி, நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ரஷ்யா அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ளது.