ரஷ்யாவை அச்சுறுத்தும் உக்ரைன்

295

கூடுதலாக வான்தாக்குதல் தடுப்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்குமாறு ஜி 7 நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல உலகநாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், கூடுதலான வான்தாக்குதல் தடுப்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்குமாறு ஜி 7 நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஜி 7 கூட்டத்தில் உரையாற்றிய அவர், உக்ரைன் போதுமான அளவு நவீன மற்றும் பயனுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை பெறும்போது, ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என கூறினார்.