உக்ரைன் சார்பாக உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர் களமிறங்கினார்

240
Advertisement

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைனின் மீது ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.இதை ஏற்றுக் கொண்ட கனேடியப் படைகளின் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான வாலி, உக்ரைன் ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் . இவர் ஒரு நாளைக்கு 40 வீரர்களைச் சுட்டுக் கொல்லும் அளவுக்குத் திறமை பெற்றவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல, வாலி உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர் என்றும் கூறப்படுகிறது.