உக்ரைன் சரக்கு விமான விபத்து – 8 பேர் உயிரிழப்பு

56

கிரீசில் உக்ரைன் சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டு சென்றது.

விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அருகில் இருந்த கவலா விமானம் நிலையத்தில் சரக்கு விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் சரக்கு விமானம் 40 கிலோ மீட்டருக்கு முன்பே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சரக்கு விமானத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.