உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்

325

தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு பதவி வழங்க வேண்டும் என தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு தெரியும் என்றும், கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பணியாற்றி கட்சிக்கும் அரசுக்கும் மகத்தான புகழ் சேர்த்திடுவோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.