கார்களில் மறந்துவிட்டு செல்லும் பொருட்களில் செல்போன் முதலிடத்தில் உள்ளது

303

நாடு முழுவதும் வாடகை கார்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கார்களில் அதிக பேர் தவறவிட்ட பொருள் குறித்து uber நிறுவனம் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில் செல்போன் முதலிடத்திலும், கேமரா 2ஆம் இடத்திலும், லேப் டாப் 3ஆம் இடத்திலும் உள்ளது.

கார்களில் பொருட்களை அதிகளவில் தவறவிடும் நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்திலும், டெல்லி 2ஆம் இடத்திலும், லக்னோ 3ஆம் இடத்திலும் உள்ளது என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.