கவன குறைவே சில நேரங்களில் நம் உயிரை பறித்துவிடும்.என்ன நடந்து விடும் என மெத்தன போக்கு , நடந்தால் பாத்துக்கலாம் என்ற எண்ணம் , இவைகைகள் தான் பெரும்பாலும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக மாறிவிடும்.
ஒரு பணியின் ஆபத்தை உணர்ந்தே, அதை பாதுகாபாக செய்து முடிக்கவேண்டும்.சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இதனை உணர்த்துகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாகனப் பணிமனையில் ,மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர்.
ராய்பூரில் உள்ள சில்தாரா தொழிற்சாலை பகுதியில் மே 3ஆம் தேதி அன்று , பழுது பார்க்க விடப்பட்ட ஜேசிபி டயரின் காற்றை நிரப்பிக் கொண்டிருந்தபோது திடிர்யென டயர் வெடித்தது, இதில், தூக்கி வீசப்பட்ட மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இரு தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.ஒரு தொழிலாளி பெரிய டயரில் காற்றை நிரப்புவதை காணமுடிகிறது.மற்றொரு நபர் வந்து காற்றின் அளவை சரிபார்க்க டயரை அழுத்துகிறார், இதுவே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.