25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது

245
Advertisement

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே கீழமாத்தூரில் ராணி(வயது 42) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று வீட்டை சோதனையிட்ட போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது.

வீட்டிலிருந்த 25 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றிய தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரத்தினம் மனைவி வசந்தா(வயது 50), வீட்டின் உரிமையாளர் ராணி ஆகியோரைப் பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும் கைது செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, வசந்தாவின் கணவர் ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.