சென்னை அருகே, பட்டா கத்தியை காட்டி, இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் எலெக்டிரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 19-ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, 2 மர்ம நபர்கள் லோகேஷை வழிமறித்து, பட்டா கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சங்கர்நகர் குற்றப்பிரிவு போலீசில் லோகேஷ் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பம்மல் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா, ஆஜஸ் ஆகிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.