சாலையை மறித்து நின்ற டிரக்கை அசால்ட்டா கடந்த நபர் 

47
Advertisement

சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அனைவராலும் வெறுக்கப்படும் தருணங்களில் ஒன்று.அது போன்று கடும் போக்குவரத்து நெரிசலில் நம் பொறுமையை இழக்கும் சூழல்கூட உருவாகிவிடும்.

ஆனால் இங்கு ஒருவர் கடும் போக்குவரத்து நெரிசலில்  செய்ததை மற்ற  கண்டு வாகன ஓட்டிகள்  திகைதிபோயினர்.இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் , சாலை ஒன்றில் டிரக்  தடுப்பு சுவரில் மோதி நின்றுவிட்டது.

முழு சாலையை இடைமறித்து நின்ற அந்த கனரக வாகனத்தால் வாகனஓட்டிகள் கடக்கும் சிரமத்திற்குள்ளாகினர்.ஓட்டுனர்கள் வேறு வழியில்லாமல் மீண்டும் தன் வாகனத்தை திருப்பியபடி  சென்றவண்ணம் இருந்த நிலையில்,

Advertisement

இருச்சக்கரத்தில் வந்த நபர் ஒருவர்,அந்த டிரக்கின் அடியே தன் இருச்சக்கரத்தை  நுழைத்து, உடம்பை வளைத்து மறுபுறம் சென்றடைந்தார்.இதை பார்த்த மற்ற நபர்கள் முழித்தபடி நின்றனர். டிரக்கை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் ஒரு வாய்ப்பாக ஏற்று தடையை கடந்து   சென்றார் அந்த நபர். வைரலாகி வரும் வீடியோவை  இணையத்தில் இதுவரை  27 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.