ஆபத்தில் இருந்த நாயை காப்பாற்றிய நிஜ ஹீரோக்கள்

154
Advertisement

விலங்குகள் செய்யும் செயல்கள் சிலநேரங்களில் வேடிக்கையாக இருக்கும்.அதே சிலநேரங்களில் அவைகளுக்கு ஆபத்தாகிவிடும்.அதுபோன்று விலங்குகள் ஆபத்தில் சிக்கித்தவித்த நேரத்தில் மனிதர்கள் காப்பாற்றிய பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு.

தற்போது மற்றொரு வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.அதில்,ஆற்றுப் பாலத்தின் ஓரம் திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த இடத்தில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறி,பாலத்தின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பை தாண்டி விழுந்துவிடுகிறது.

இதை கவனித்த அங்கிருந்த ஒரு நபர்,சிறுத்தும் அஞ்சாமல் தன் உயிரை பணயம் வைத்து,தடுப்பில் படுத்தபடி,தடுப்பிற்கு மற்றொரு புறத்தில் தண்ணீரை தொட்டபடி சிறிய ஒரு கல்லின் மேல் பயந்துபோய் நின்றுகொண்டு இருக்கும் அந்த நாயை தன் ஒரு கையால் மேலே தூக்க முயற்சிக்கிறார்.

மிக ஆபத்தான முயற்சியில் ஈடுபடும் இந்த நபரை கண்ட மற்றொரு நபரும் ஓடிவந்து உதவுகிறார்.இருவரும் தங்கள் முயற்சியால் அந்த நாயை காப்பாற்றுவிட்டனர்.பின்பு ,நாயை ஆபத்திலிருந்து காப்பாற்றிய தன் தந்தை மேலே வந்தவுடன் உணர்ச்சிவசப்படும் சிறுவன் ஒருவன்,அவரை அனைத்துக்கொள்கிறான்.

காப்பாற்றிய நாயை மேலே அழைத்துச்செல்ல அந்த அந்த நபர் நாயின் அருகில் சென்றதும்,அது பயந்து ஓடிவிடுகிறது.பின் அதை கவனிக்காமல் படிக்கட்டில் ஏறிச்செல்லும் அந்த நபரை பார்த்து,அந்த நாயும் அந்த நபரை பின்தொடர்ந்து நடைபோட தொடங்கியது.

பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.