நீர்யானைமீது சவாரிசெய்த ஆமைகள்

91
Advertisement

நீர்யானைமீது ஆமைகள் சவாரிசெய்த வீடியோ இணையத்தில்
வைரலாகி வருகிறது. சுதா ராமன் என்னும் இந்திய வனத்துறை
அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கியிருக்கும் நீர்யானையைத் தரை என
நினைத்துவிட்டது போலும் ஆமைகள். அதன்மீது அமர்ந்து
பல ஆமைகள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றன.

திடீரென்று நீர்யானை எழுந்து நிற்க அதன்மீது அமர்ந்திருக்கின்ற
ஆமைகளில் சில கீழே நீர்யானையைப் பற்றி நிற்கமுடியாமல் வழுக்கி விழுகின்றன.

Advertisement

நீர்யானை சிறிதுதூரம் நடக்க, அதனைப் பற்றி நிற்க முடியாமல்
மேலும் சில ஆமைகள் நீருக்குள் விழுகின்றன. நீர்யானையோ
தன் எதிரில் யாரும் நிற்கிறார்களா….அவர்களோடு சண்டை
போடலாமா என்பதுபோலப் பார்க்கிறது-

இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ள ஐஎஃப் அதிகாரி,
”சிலசமயம் இலவச சவாரிகள் அபாயகரமானதாக இருக்கும்” என்று
கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதானே….ஓசின்னா உடனே எல்லாரும் கிளம்பிருவாங்களே…