துருக்கி கனமழை – வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழப்பு

turkey
Advertisement

துருக்கியில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.