சாலையில் கட்டுபாடுயின்றி ஓடிய ‘டிரக்’

34
Advertisement

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சாலையில் கட்டுபாடுயின்றி  ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட சாலை ஒன்றில்  நீளமான கனரக வாகனம் ஒன்று சென்றுகொண்டு இருந்தது.ஒருகட்டத்தில் அருகில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் சட்டெனெ திரும்பியது.

அங்கு ஓரமாய் நிறுத்திவைக்கப்பட்டுருந்த கார் ஒன்றை உரசியபடி உள்ளே நுழைகிறது.கார் ஒன்றை இடித்தும் கூட அந்த கனரக வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தவில்லை.

Advertisement

பின் உள்ளே சென்ற அந்த வாகனம்,மறு வழியாக வெளியே வருகிறது.மீண்டும் சாலையில் வந்த அந்த வாகனம் எதிரே வந்த மற்றொரு பிக் அப் டிரக் ஒன்றின் மீது மோதி சற்று தூரம்  இழுத்துச்சென்றது.

இதனை அந்த சாலையில் வந்துகொண்டு இருந்த மற்றொரு வாகன ஓட்டி படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.பின் , விபத்தை ஏற்படுத்திய கனரக வானத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனரை காவல்துறை கைதுசெய்தனர்