தன்னை சீண்டியவரின் கழுத்தை கவ்விய ஒட்டகம்

29
Advertisement

விலங்குகள் மனிதர்கள் இடையேயான இணைப்பு சில தருணங்களில் ஆபத்தில் முடிந்துவிடும்.குறிப்பாக காட்டுவிலங்குகளை அடக்கி ஆள நினைப்பது முட்டாள்தனம்.

இதனை உணர்ந்தும் மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,அதில், ஒட்டகத்தை வைத்து சாகசம் காட்டுவது போல உள்ள ஒரு இடத்தில் மக்கள் கூடி நிற்கின்றனர்.அங்கிருந்த ஆட்டத்தை ஒரு நபர் சீண்டியுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த ஒட்டகம் அவரின் கழுத்தை கவ்விப்பிடித்துள்ளது.கோபத்தில் கழுத்தை கடித்தபடி நிற்கும் அந்த ஒட்டகத்தின் அருகில் கூட ஒருவரும் சென்று அந்த நபரை காப்பாற்ற முன்வரவில்லை.

Advertisement

ஒட்டகத்தின் கடியில் சிக்கியுள்ள அந்த நபர் விடுபட போராடுவது நன்றாக தெரிகிறது.ஒரு கட்டத்தில் அவரின் வாயிலிருந்து நுரை வர தொடங்கியது.ஆபத்தான நிலையில் இருக்கும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்த மக்களை நினைத்து வருத்தம் தெரிவித்துவருகின்றனர் இணையவாசிகள்