திருச்சி மத்திய சிறை வளாகத்தில் – NIA அதிகாரிகள் சோதனை

35

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் பல்கேரியா, இலங்கை, சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 143 பேர் உள்ளனர். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக NIA எஸ்.பி. தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட CRPF வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை நடைபெற்று வருகிறது. முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.