தண்டவாளத்தை கடக்கமுயன்ற காரின்மீது போதிய இரயில்

27
Advertisement

இரயில் பாதுகாப்பு விதிகளை மீறும்போது ஏற்படும் விபத்துகள் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் முக்கிய பிரச்னை.இந்நிலையில் கனடாவில் இரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்று  ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி கட்சியை வெளியீட்டுள்ளது அந்நாட்டு இரயில் நிர்வாகம்.

அதில்,இரயில்  வரும் நேரம்  தண்டவாளம் ஒன்றில் உள்ள தடுப்பு  மூடப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.அந்நேரம் அவ்வழியில் வந்த   கார் ஓட்டுநர் ஒருவர் தடுப்பை தாண்டி மறுபுறம் செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் தண்டவாளம் இடையில் அவரின் கார் மாட்டிக்கொள்கிறது.இதற்கிடையில் கண்ணிமை நேரத்தில் வந்த இரயில் அந்த காரின் மீது மோதியது,அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த நபர் காயங்களுடன் உயிர்தப்பினார் எனவும் இரயில் வரும்போது அவர் காரிலிருந்து வெளியேறியதாகவும், இந்த சம்பவம் இதுபோல தண்டவாளங்களை கடப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement