மதுப் பிரியர்களுக்கு நடந்த சோகம்

84

திருப்பூர் அருகே தண்ணீர் என நினைத்து பிராந்தியுடன் ரசாயனத்தை கலந்து குடித்த, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர்.

வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரண்டு பேர், மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர். அவசரத்தில் தண்ணீர் வாங்காத அவர்கள், வெள்ளைப் பாட்டிலில் இருந்த ரசாயனத்தை, தண்ணீராக நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சலால் அவதியுற்ற அவர்கள்,ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement