என்னா ட்ரிக்கா அன்பளிப்பை வாங்கிறார் பாருயா இந்த காவலர் !

346
Advertisement

அதிகாரிகள் நேர்மையானவர்களாக  இருந்தாலும்,ஒரு சிலர் லஞ்சம் வாங்குவது பாரம்பரியமாக படைப்பிடித்து வரும் ஒரு வழக்கமோ ? என தோன்றுகிறது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவதற்கு ஒரு தனித்துவமான வழியைக் கண்டுபிடித்துள்ளது போல தெரிகிறது என பகிரப்பட்டு உள்ளது.

அதில் , சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து  காவலர் ஒருவர்,சந்தேகத்தின் பேரில்  சாலையில் வந்த ஸ்கூட்டி ஓட்டுநரை நிறுத்தி,ஆவணங்களை கேட்ப்பது போல தெரிகிறது.

ஆனால், அந்த நபரிடம் சில ஆவணங்கள் இல்லை.இதையடுத்து அந்த போக்குவரத்து காவலர் அவரிடம்  பணம் கேட்டதாக கூறப்படுகிறது.அவரும் காவலரின் வற்புறுத்தலின் பேரில்  லஞ்சப் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், லஞ்சப் பணத்தை கையில் வாங்குவதற்கு  பதிலாக அந்தக் காவலர் தனது தொப்பியைக் கழற்றி அதில் பணத்தை வைத்து மீண்டும் தலையில் போட்டுக் கொண்டார். எதிர்புறத்தில் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.