விழா நாயகன் ஆன “ஆமை” 

27
Advertisement

சில ஆண்டுகளுக்கு முன் லண்டனின்  லிங்கன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆய்வகத்தை ஆமையை வைத்து திறந்த வீடியோ, தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. 

லிங்கன் பல்கலைக்கழகத்தின் அப்போது புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தை, வளர்ப்பு ஆமை வைத்து திறந்துவைக்கப்பட்டது அனைவரும் ஆச்சரியமடைய செய்தது.

சார்லஸ் டார்வின் என்ற ஆமை நிகழ்ச்சி நாயகனாக,அதாவது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வகத்தின் முன் கட்டப்பட்ட இலை நாடாவை  தன் வாயால் கடித்து இருதுண்டாக்கி  புதிய ஆய்வகத்தை திறந்துவைத்தது.

Advertisement

இந்நிலையில் ,அனைவரையும் கவர்ந்த இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.