தமிழக பட்ஜெட்டின் TOP 30 அறிவிப்புகள் இதோ…

528
Advertisement

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரையும் மேலும் வருகிற திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டின் TOP 30 அறிவிப்புகள் இதோ…

  1. சென்னையை மேம்படுத்த சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
  2. கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ.135 கோடி ஒதுக்கீடு
  3. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் ரூ.13,000 கோடி இழப்பை அரசே ஏற்கும்
  4. மின்சாரத்துறை வழங்கும் மின் கட்டண மானியத் தொகைக்கு ரூ.9,379 கோடி ஒதுக்கீடு
  5. பேருந்துகள் நவீன மயமாக்கல், மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.5,375 கோடி ஒதுக்கீடு
  6. அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க ரூ.698 கோடி ஒதுக்கீடு
  7. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும்
  8. பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு
  9. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்ட மானியாக ரூ.1,620 கோடி வழங்கப்படும்
  10. தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்
  11. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழகளில் வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு
  12. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  13. சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் புதிய “பொட்டானிக்கல் கார்டன்” அமைக்கப்படும்
  14. சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா 20 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என அறிவிப்பு
  15. நில அளவை “ரோவர்” இயந்திரங்களுக்கு ரூ.15 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு
  16. நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை பாதுகாக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு
  17. சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு
  18. ஆதரவில்லாத கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
  19. பழமையான தேவாலயங்கள், தர்ஹாக்கள் புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு
  20. MLA-க்களின் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு
  21. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  22. விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்
  23. நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை பாதுகாக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு
  24. உரிய நேரத்தில் வானிலை எச்சரிக்கையை வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
  25. பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக்களின் கடன் தள்ளுபடிக்காக ரூ.4,131 கோடி ஒதுக்கீடு.
  26. டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.80 கோடி ஒதுக்கீடு.
  27. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும்.
  28. அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
  29. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க சிறப்பு திட்டம்
  30. ஆர்.கே.நகரில் சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம்.