சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா? சமையலில் சக்கை போடு போட சூப்பர் டிப்ஸ்…!

154
Advertisement

‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என சொல்வார்கள்.

ஆனால், அதே சமயம் உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டால் உணவுகளை சாப்பிட முடியாத வகையில் ஆகிவிடும். இதனால், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க, சில எளிய வழி முறைகளை பின்பற்றினாலே போதும்.

உப்பு அதிகமாகி விட்ட குழம்பை சரி செய்ய ஒரு ஸ்பூன் தயிர் அல்லது பால் ஊற்றி கொதிக்க விடலாம். ஒரு உருளைக்கிழங்கை வெட்டி குழம்பில் சேர்த்தாலும், உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் அதிகப்படியான உப்பை உள்வாங்கி கொண்டு குழம்பின் இயல்பான சுவையை மீட்டுத் தரும். சப்பாத்தி மிருதுவாக வர ஒரு தேக்கரண்டி பால் அல்லது எண்ணெய் சேர்த்து மாவு பிசைய வேண்டும்.

பூரி புஸ்ஸென வருவதற்கு, பிசைந்த மாவை Fridgeஇல் வைத்து, சமைப்பதற்கு சிறிது நேரம் முன்னர் வெளியே எடுத்து செய்தால் பூரி நன்றாக வரும். அதிகமான காரம் சேர்த்து விட்டால் சற்று பால் ஊற்றி நன்கு கலந்து விட்டாலே போதும். பால் காரமான குழம்பில் உள்ள கேப்சீன் சத்துக்களை உறிஞ்சி அதிகமான காரச்சுவையை குறைக்க உதவும். மேலும், வெங்காயத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு வெட்டினால் கண்ணீர் வராது என்பது குறிப்பிடத்தக்கது.